
யூனியன் அஷ்யூரன்ஸ் வழங்கும் ஸ்மார்ட் லைஃவ் உடன் குறுங்கால முதலீடு; நீண்ட கால பாதுகாப்பு மற்றும் அனுகூலங்கள்
யூனியன் அஷ்யூரன்ஸ் வழங்கும் ஸ்மார்ட் லைஃவ் உடன் வாடிக்கையாளர்கள் தமது வெற்றிகரமான வாழ்க்கைக்காக முதலீடுகளை மேற்கொள்ள முடியும். ஸ்மார்ட் லைஃவ் இனால் 3, 5 அல்லது 7 வருடங்கள் எனும் குறுங் காலப்பகுதிக்கு கட்டுப் பணம் செலுத்தி, 40 வருடங்கள் வரை தொடர்ச்சியான பாதுகாப்பை அனுபவிக்க முடியும்.
ஸ்மார்ட் லைஃவ் இனால் உங்களின் வாழ்க்கைக்கான பாதுகாப்பையும் முதலீட்டு இலக்குகளையும் குறுங் கால அடிப்படையிலான முதலீட்டுக் காலத்தில் எய்துவதற்கு உதவியாக அமைந்திருப்பதுடன், உங்களின் அன்புக்குரியவர்களுக்கு நீண்ட கால பாதுகாப்பையும், முதிர்ச்சியின் போது கவர்ச்சிகரமான வருமதியையும் வழங்கும். தற்போது நிலவும் குறைந்த வட்டிவீதங்களுடனான சூழ்நிலையில், ஸ்மார்ட் லைஃவ் என்பது நிலையான முதலீட்டு தீர்வாக அமைந்திருக்கும்.
விபத்து அனுகூலங்கள், அங்கவீன அனுகூலங்கள் மற்றும் ஹெல்த் 360 அடங்கலாக சுகாதார காப்பீட்டு அனுகூலங்களைப் பெற்று வாடிக்கையாளர்கள் தமது பாதுகாப்பு அனுகூலங்களை மேம்படுத்திக் கொள்ள முடியும். ஹெல்த் 360 இனால் காப்புறுதிதாரரின் வாழ்க்கைத் துணை, பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள் என மூன்று தலைமுறையினருக்கு அனுகூலங்கள் வழங்கப்படுகின்றது.
முழுக் குடும்பத்தின் சுகாதார தேவைகளையும் நிவர்த்தி செய்வதற்கு ஒற்றைத் தீர்வாக அமைந்திருப்பதுடன், வைத்தியசாலைக் கட்டணங்கள், சத்திர சிகிச்சை, மருந்துப் பொருட்கள், பிரசவ சேவைகள், வைத்திய நிபுணர்கள், பல் வைத்தியம் மற்றும் மூக்குக் கண்ணாடி சேவைகள் போன்றவற்றுக்கு பரந்தளவு காப்பீட்டை வழங்குகின்றது.
காப்புறுதி தவணை நிறைவில் கவர்ச்சிகரமான வருமதியுடன், ஸ்மார்ட் லைஃவ் என்பது குறுங் கால அல்லது நீண்ட கால சேமிப்பு இலக்குகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கான சிறந்த முதலீட்டு மற்றும் பாதுகாப்பு தீர்வாக அமைந்திருக்கும்.
மேலதிக தகவல்களுக்கு, யூனியன் அஷ்யூரன்ஸ் ஹொட்லைன் இலக்கமான 1330 உடன் தொடர்பு கொள்ளவும் அல்லது https://unionassurance.com/smart-life/எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும்.
நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்படும்.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.