குடிபோதையில் பொலிஸாரிடம் ரகளை செய்த பிரபல நடிகை கைது

மும்பையை சேர்ந்த பிரபல நடிகை காவ்யா தாபர். மாடலிங் துறையில் நுழைந்து பின்னர் நடிகையான இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் மார்க்கெட் ராஜா என்ற படத்திலும், இந்தியில் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் மும்பை ஜூகுவில் உள்ள நட்சத்திர ஓட்டல் அருகே காரில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது, அவரது கார் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதுபற்றி அறிந்ததும் பொலிஸார் அங்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. மேலும் அவர் பொலிஸாரின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததுடன், அவர்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் பெண் பொலிஸார் ஒருவரின் சீருடையை பிடித்து இழுத்து தாக்கவும் முற்பட்டுள்ளார். இதையடுத்து போலீசார் நடிகை காவ்யா தபாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *