
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளதாக, கர்தினால் மெல்கம் ரஞ்சித் மீண்டும் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், இவ்வாறு தெரிவித்துள்ளார் .
மேலும் அவர் தெரிவிக்கையில் காவல்துறை மற்றும் அரசாங்கத்தில் உள்ள உயர் அதிகாரிகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையை அரசாங்கம் மறைக்கிறது என்பது வெளிப்படையானது என்றும் குற்றம் சுமத்தினார்.
கத்தோலிக்க சமூகம் தற்போது அரசாங்கத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துள்ளதோடு , அரசாங்கமும், சட்டமா அதிபர் திணைக்களமும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட ஆதாரங்களை மறைத்துவிட்டதாகவும் கர்தினால் குற்றம் சுமத்தினார் .