
மட்டக்களப்பு, பெப் 20: விளையாட்டு மைதான கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்குதல், மனித, பௌதீக வளங்களை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக முன்றலில் இருந்து செங்கலடி வரை ஞாயிற்றுக்கிழமை பேரணியாகச் சென்றனர்.
இந்த பேரணி தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில் ” பல்கலைக்கழகத்துக்கு யிற்சியாளர்கள் நியமிக்கப்படவேண்டும். நிதி ஒதுக்கீடு செய்து “SLUG -2023” போட்டியை பல்கலைக்கழக வளாகத்தில் நடத்த வேண்டும். பல்கலைக் கழகத்தை அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக திறக்க வேண்டும். பல்கலைக்கழக சிற்றூண்டிச்சாலைகளில் மலிவான விலையில் தரமான உணவை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிழக்குப் பல்கலைக்கழக முன்றலில் இருந்து செங்கலடி வரை பேரணியாகச் செல்கிறோம்.சம்பந்தப்பட்ட தரப்பினர் விரைந்து செயற்பட்டு எமது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.நாங்கள் பலமானவர்கள் நாங்கள் பல்கலைக்கழகமாணவர்கள் என்று உரக்க சொல்வோம் என்றார்கள் அவர்கள்.