அரச நிறுவனங்கள் மின்சாரம், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த உத்தரவு

கொழும்பு, பெப் 20: மின்சாரம், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) வேண்டுகோளின் பேரில் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக பொதுச் சேவைகள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ரத்னசிறி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் ” குளிரூட்டிகளின் பயன்பாட்டை முடிந்தளவு குறைக்குமாறு அரசு அலுவலகங்களை கோரியுள்ளோம். மேலும், தேவையற்ற மின் விளக்குகளை அணைக்குமாறும் வலியுறுத்தியுள்ளோம்.

மேலும், அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று அரச நிறுவனங்களைக் கேட்டுள்ளோம்.கலந்துரையாடல்கள், கருத்தரங்குகளுக்கு வெளிமாவட்டங்களிலிருந்து அதிகாரிகளை கொழும்புக்கு வரவழைப்பதற்கு அரசு வாகனங்களைப் பயன்படுத்துவது ஏற்கனவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *