
கொழும்பு, பெப் 20: மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் புற்றுநோயாளர்களுக்கென்று தனியாக ஒதுக்கப்பட்டுள்ள முதன்மை சிகிச்சை நிலையமாக மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை விளங்குகிறது.
கடந்த சில மாதங்களாக இம் மருத்துவமனையில் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக நோயாளர்கள் தெரிவித்தனர்.
ஆனால், அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் விஜித் குணசேகர ‘ மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவவில்லை. ஆனால், தனிப்பட்ட நோயாளிகள் சிலரின் மருந்து வகைகள் கிடைப்பதில் சற்று தாமதம் நிலவுகிறது’ என்றார்.இதனிடையே, பதுளை பொது வைத்தியசாலையிலும் புற்றுநோயாளர்களுக்கு வழங்கப்படும் சில மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக நோயாளர்கள் தெரிவித்தனர்.