இலங்கை எல்லா இடங்களிலும் பின்னிலை – இளைஞர்கள் முன்னேறுவது எப்படி? சபையில் உதயகுமார் எம்.பி. ஆதங்கம்…!

உயிர் வாழ்வதற்கான  பட்டியலில் இலங்கை பின்னணியில் இருக்கிறது. அத்துடன் மகிழ்ச்சியாக வாழக்கூடிய நாடுகளில் பட்டியலில் இலங்கை பின்னணியில் இருக்கிறது. ஜனநாயகம் பாதுகாக்கப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கை பின்னணியில் இருக்கிறது. இப்படி இருந்தால் சிறுவர், மகளிர், இளைஞர்கள் எப்படி முன்னோக்கி பயணிக்க முடியும்.  என நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

இந்நாட்டிலே சிறுவர், மகளிர், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. திக்கு திசை தெரியாமல் பயணிக்கின்ற நிலைமையை காணக்கூடியதாகவுள்ளது. எது  வேதனை தரக்கூடிய ஒரு விடயமாகும். மேலும் உயிர் வாழ்வதற்கான  பட்டியலில் இலங்கை பின்னணியில் இருக்கிறது. அத்துடன் மகிழ்ச்சியாக வாழக்கூடிய நாடுகளில் பட்டியலில் இலங்கை பின்னணியில் இருக்கிறது. ஜனநாயகம் பாதுகாக்கப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கை பின்னணியில் இருக்கிறது. இப்படி இருந்தால் சிறுவர், மகளிர், இளைஞர்கள் எப்படி முன்னோக்கி பயணிக்க முடியும். 

இந்நாட்டிலே சிறுவர், மகளிர், இளைஞர்களின் எதிர்காலத்தை சிறந்த முறையில் உருவாக்க வேண்டும். அத்துடன் சீர் கேடான நடவடிக்கைகள் நாட்டில் அதிகரித்து காணப்படுகிறது. இது  தொடர்பில்  இளைஞர்களுக்கு பாதுகாப்பினை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும். 

நாட்டில் தொழில்வாய்ப்பின்மை, பொருளாதார பிரச்சினை காணப்படுகிறது. இதன் காரணமாக தவறான முடிவுகளை இளைஞர்கள் எடுக்கின்றனர். இதனால் பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் சமூக ஊடக பிழையான பாவனை காரணமாக இளைஞர்கள் வழி மாறி செல்லும் நிலைமை உள்ளது. இதனை நாம் மாற்றியமைக்க வேண்டும். இவர்களை தொழில் முனைசார் திட்டங்களில் ஈடுபடுத்த வேண்டும். அதற்கான திட்டங்களை அரசாங்கம் வகுக்க வேண்டும்.  என மேலும் தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *