
யாழ்ப்பாணம், பெப்.20
இளவாலையில் 5 மாதப் பிள்ளையுடன் தலைமறைவான கணவனைத் தேடி மனைவி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளார்.
கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கணவன் 5 மாதப் பிள்ளையை தூக்கிச் சென்றமை தொடர்பில் இளவாலைப் பொலிஸில் முறையிடப்பட்டதனையடுத்து பொலிஸார் மல்லாகம் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இதடையடுத்து கணவனை நீதிமன்றில் முற்படுமாறு கோரியதற்கினங்க பிள்ளையின்றி நீதிமன்றில் முன்னிலையான கணவரிடம் குழந்தை 5 மாத பாலூட்டும் குழந்தை என்பதற்கிணங்க தாயாரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் இடைக்கால கட்டளை வழங்கிய நிலையில் குழந்தையை தாயாரிடம் ஒப்படைக்காது கணவரும் தலைமறைவாகியதனால் தாயார் குழந்தையை தேடி அலைகின்றார்.