
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மறைந்திருந்த நபர் ஒருவர் திறந்த பிடியாணையில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மோதலில் ஈடுபட்டதால் அவருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இருந்தும் அவர் வழக்குகளுக்கு செல்லாத காரணத்தினால் மல்லாகம் நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர் நேற்றைய தினம் வட்டுக்கோட்டை பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.