கல்முனையில் இன்று இடம்பெற்ற கையெழுத்துப் போராட்டம்!
பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரும் கையெழுத்துப் போராட்டம் இன்று (20)கல்முனையில் நடைபெற்றது.
தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் கல்முனை பேருந்து நிலையத்துக்கு அருகாமையில் நடைபெற்ற இப்போராடடத்தில் பொது மக்களுடன் த. தே. கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அம்பாறை, மட்டகளப்பு மாவட்டங்களின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள்,கல்முனை மாநகரசபை (த. தே. கூ) உறுப்பினர்கள், காரைதீவு பிரதேசபை தவிசாளர், தமிழரசுக்கட்சி வாலிபர் முன்னணி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.