
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் – வேரம் பகுதியில் நேற்றையதினம் கஞ்சா பாவித்தவாறு 33 கிராம் கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த நால்வர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட நால்வரையும் வட்டுக்கோட்டை பொலிஸார், மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சியில் கொட்டும் மழையிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!