
யாழ்ப்பாணம், பெப்.20
கச்சதீவு திருவிழாவில் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பில் இன்னும் சில தினங்களில் ஜனாதிபதியுடன் கலந்தாலேசித்த பின்னர் முடிவை அறிவிப்பேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – பாசையூர் கடல் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட அடையாள விளக்கு கோபுரத்தின் செயற்பாடுகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.