
கொழும்பு, பெப்.20
நாட்டில் சுற்றுலாத்துறைக்காக உத்தேச உத்தியோகபூர்வ அலைபேசி செயலி (Mobile App) இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், சுற்றுலாத் துறை தொடர்பான அனைத்து இடங்களிலும் டிக்கெட் வாங்க முடியும். இந்த செயலி மூலம் நாட்டில் உள்ள ஹோட்டல் மற்றும் தங்குமிடங்களை முன்பதிவு செய்ய முடியும்.
அனைத்து வெளிநாட்டு நாணயங்களின் மூலமாகவும் இந்த முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்பது ஒரு சிறப்பு அம்சமாகும். இந்த செயலி பயன்பாட்டிற்கு நாட்டில் உள்ள அனைத்து ஹோட்டல்களின் தகவல்களும் சேர்க்கப்படும்.
சுற்றுலா இடங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள், பயணத் தகவல்கள், கூகுள் மப்ஸ், தரப்படுத்தப்பட்ட சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலா பொலிஸ் அவசர சேவைகள் ஆகியவை இதில் அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.