யாழில் பற்றிக் கைத்தறி உற்பத்திகளை 9 மத்திய நிலையங்களாக உருவாக்க திட்டம்

எதிர்வரும் காலங்களில் பற்றிக் கைத்தறி உற்பத்திகளை 09 மத்திய நிலையங்களாக யாழ் மாவட்டத்தில் உருவாக்க இருக்கின்றோம் என பற்றிக் கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தில் மக்கள் மாயப்படுத்தப்பட்ட வருமானத்தினை பெற்றுக்கொடுத்தல் ஆகுகின்றது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவால் கிராமத்து வேலைத்திட்டத்திற்காக 85 ஆயிரம் மில்லியன் ரூபா நிதியுதவியில் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதில் கூடுதலாக ஒதுக்கப்பட்ட நிதியுதவியினை கிராமமட்டத்தில் உள்ள பெண்தலைமைத்துவமான குடும்பங்களின் வருமானங்களை அதிகரித்தலே முக்கியம் ஆகின்றது. அனைத்து கிராம சேவையாளர்கள் பிரிவில் 30 இலட்சம் ரூபா நிதியுதவி ஒதுக்கப்பட்டுள்ளது.

பற்றிக் கைத்தறி உற்பத்திகளை எதிர்வரும் காலங்களில் 09 மத்திய நிலையங்களை உருவாக்க இருக்கின்றோம்.இந்த பயிற்சிகளை பெறுவதற்காக 77 மில்லியன் ரூபா நிதியுதவியில் திட்டங்கள் முன்னெடுக்கப்படயுள்ளது.பற்றிக் கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சௌபாக்கியா பற்றிக் உள்ளூர் உற்பத்தி விற்பனை நிலையம் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் 20.02 யாழ் பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜே 81 கிராமசேவையாளர் பிரிவில் திறந்து வைக்கபட்டுள்ளது.

ஜனாதிபதியின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைத்திட்டத்தின் படி நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் ‘ என் கனவு யாழ்’ எண்ணக்கருவில் குறித்த விற்பனை நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்வில், பற்றிக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர பிரதம விருந்தினராக கலந்துகொண்டு விற்பனை நிலையத்தினை திறந்து வைத்துள்ளார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன், யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் க.மகேசன், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *