
கொழும்பு, பெப்.20
யுத்தத்தின் போது காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பது அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடிப்பது யதார்த்த ரீதியாக முடியாத ஒரு விடயமாகும் என சீனாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கோஹன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பது அர்த்தமற்றது. அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த விடயத்தில் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதே இதற்கு தீர்வாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காணாமல் போனோர்களில் சிலர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்