சீனாவில் இருந்து வந்த குழுவினர் ஒன்று நீர்கொழும்பில் உள்ள பிரபலமான ஹொட்டல் வலையமைப்புக்கு சொந்தமான ஆடம்பர ஹொட்டலை முற்றாக கைப்பற்றியுள்ளனர்.இதனடிப்படையில், அங்கு பணிப்புரிந்த சகல ஊழியர்களுக்கு நீக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதற்கு என்ன காரணம் என்பது தெளிவில்லை என்ற போதிலும் அந்த ஹொட்டலில் தற்போது முழுமையாக சீன பிரஜைகளே தங்கி உள்ளனர்.வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளோ, ஊழியர்களே அந்த ஹொட்டலில் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன குழுவினர் எதற்காக நீர்கொழும்பில் உள்ள இந்த ஹொட்டலில் தங்கியுள்ளனர் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
