முல்லைத்தீவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய மாநாடு!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த தேசிய மாநாடு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபை கலாசார மண்டபத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களான சட்டவாளர் க.சுகாஸ், காண்டிபன், உள்ளிட்ட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் தமிழ் தேசிய முன்னணியின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பிரதேச சபை உறுப்பினர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் கட்சியின் தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

நிகழ்வின் முன்னதாக கட்சிக்கொடி கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் ஏற்றிவைக்கப்பட்டு, பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்தினை தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது 2022 ஆம் ஆண்டுக்கான கட்சியின் கொள்கைப் பிரடகடனம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இரண்டு தேசங்கள் இணைந்த ஒருநாடு என்ற அரசியல் தீர்வும், அரசியல் கைதிகளும் அனைவரும் விடுவிக்கப்படவேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் சர்வதேச பக்கசார்பற்ற விசாரணை கோரி தொடர்ந்து போராடுவோம்.

இனஅழிப்பு போர்குற்றங்கள் தொடர்பில் முழுமையான சர்வதேச பக்கசார்பற்ற விசாரணை வேண்டும். போரின் பின்னரும் தொடர்ந்தும் கட்டமைப்பு சார் இன அழிப்பு செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

எல்லைகள் மாற்றி அமைத்து பிரதேச மட்டத்தில் உள்ள நிர்வாக அலகுகளுக்கு தமிழர்களை சிறுபான்மையினர் ஆக்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்த போராடுவோம். தமிழ்தேசத்தின் கடல்சார் பொருளாதாரத்தினை பாதுகாப்போம், தமிழர்தேச வரலாற்றினை சிங்களமயமாக்க முயலும் சதி முயற்சிகளை முறியடித்து செயலாற்றவேண்டும்.

மலையக மக்களின் உரிமைகளுக்காக இணைந்து குரல்கொடுப்போம், கிராமிய உழைப்பாளர்கள் எதிர்நோக்கும் சமூகமாற்ற ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நாமும் இணைந்து குரல்கொடுப்போம். முன்னால் போராளிகளையும் மக்களையும் வறுமையில் இருந்து பாதிப்புக்களில் இருந்தும் மீட்டெடுக்க உழைப்போம். சமூக சீரழிவுக்கு எதிராக போராடுவோம்.

போதைப்பொருள் பாவனை மற்றும் வன்முறை கலாச்சரத்திற்கு எதிரா போராடுவோம் என கொள்கைப்பிரகடனம் எடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *