யாழ்ப்பாணம், பெப்.20
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட மாநாடு வடமராட்சி கொலின்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
சனிக்கிழமை வவுனியாவில் சு.கவின் மாநாடு இடம்பெற்றதைத் தொடர்ந்து இன்று யாழில் நடைபெற்றது.

கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில், முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, கட்சியின் பிரதானிகள் நிமால் சிறிபால டி சில்வா, தயாசிறி ஜயசேகர, துமிந்த சில்வா மற்றும் சுரேன் ராகவன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் பொருமளவு மக்களும் கலந்து கொண்டுள்ளனர்.

