
மக்களுடைய வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் இந்த ஊடகங்கள் நற் செய்தியை கொண்டு சேர்க்க வேண்டும் என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.
சமூகம் மீடியா குழுமத்தின், புதிய கட்டட திறப்புவிழா யாழில் இன்று இடம்பெற்றது. நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இயேசு கிறிஸ்து இறுதியாக கூறியது, ‘உலகுக்கு நற் செய்தியை தெரிவியுங்கள்’ என்று. அதை தான் ஊடகங்கள் செய்ய வேண்டும். மக்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை இந்த ஊடகங்கள் ஏற்படுத்துகின்றது.
ஊடகங்களுக்கு இடையே போட்டிகள் காணப்படுகிறது. இந்த ஊடகத்தில் பார்த்தால் நடுநிலைமையான செய்திகள் வரும், இந்த ஊடகத்தை பார்த்தால் சார்பான செய்திகள் வரும் என்று மக்கள் கணித்து வைப்பார்கள்.
அத்துடன் இன்று மக்கள் பல்வேறு சுமைகளுடன் வாழ்கின்றனர். மன உளைச்சலுடன் வாழ்கின்றனர். அதற்கு ஒரு காரணமாக ஊடகமும் உள்ளது. ஆகவே மக்களை அமைதிப்படுத்தும், நேருக்கு கொண்டு செல்லும் வழியாக ஊடகம் அமைய வேண்டும்.- என்றார்.