ஐந்தாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் சமூகம் மீடியா குழுமத்தின், புதிய கட்டட திறப்புவிழா இன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் திருநெல்வேலி, சிவன் வீதி இல.35 இல் அமைந்துள்ள இப் புதிய அலுவலக கட்டடத்தை நிறுவன தலைவர் ஆறுமுகம் கிருபானந்தன் அவர்களின் தாயார் திருமதி ஆறுமுகம் நாகேஸ்வரி அவர்கள் நாடா வெட்டி திறந்து வைத்தார்.
நிறுவன தலைவர் ஆறுமுகம் கிருபானந்தன் தலைமையில் ஆரம்பமான இந்த நிகழ்வில் மதத்தலைவர்கள் மற்றும் விருந்தினர்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க வரவேற்கப்பட்டனர்.
மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. ஒரு நிமிட மௌன அஞ்சலியை தொடர்ந்து யாழ். விழிப்புலன்ற்றோர் சங்க உறுப்பினர்களால் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.
வரவேற்புரையை சமூகம் மீடியாவின் நிகழ்ச்சித்தொகுப்பாளர் உ.ஆரூரன் நிகழ்த்தினார். அதனைத்தொடர்ந்து மதத்தலைவர்களின் ஆசியுரை இடம்பெற்றது.
நிகழ்வின் சிறப்பு பகுதியாக சமூகம் மீடியாவின் நன்கொடை திட்டத்தின் கீழ் யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்துக்கு நன்கொடை வழங்கப்பட்டது.
நிகழ்வின் அடுத்த கட்டமாக, சமூகம் மீடியாவின் வரலாற்று பதிவு ‘சமூகத்தின் பயணம்’ காணொளி ஒளிபரப்பப்பட்டது.
தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் உரை இடம்பெற்றது. அந்த வகையில் பேராசிரியர் பொன் பாலசுந்திரம் பிள்ளை, யாழ். பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் ஏ.சண்முகதாஸ், யாழ். பல்கலைக்கழக ஓய்வுநிலை பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ், பேராசிரியர் எஸ்.சண்முகலிங்கம், மூத்த ஊடகவியாளர் திரு.ராதையன், யாழ் பல்கலைக்கழக அரசறியவியல் துறை பேராசிரியர் கே.ரி கணேசலிங்கம், யாழ் பல்கலைக் கழக ஊடக கற்கை நெறி விரிவுரையாளர் எஸ்.ரகுராம், யாழ். விழிப்புணர்வற்றோர் சங்க தலைவர் சுதாகர், படைப்பாளிகள் உலக தலைவர் ஐ.கதிர்காமநாதன், வடக்கு மாகாண கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாச சம்மேளத்தின் தலைவர் க.அன்னராசா ஆகியோர் உரையாற்றினார்கள்.
சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் நிறுவன தலைவரால் பொன்னாடை போர்க்கப்பட்டு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து நிகழ்வின் சிறப்பம்சமாக சமூகம் மீடியா குழுமத்தினரால் நிறுவன தலைவர் ஆறுமுகம் கிருபானந்தன், பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். படைப்பாளிகள் உலகம் சார்பாகவும் நிறுவனத்தலைவர் பொன்னாடை போர்க்கப்பட்டு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
தொடர்ந்து அரசியல் தலைவர்கள், அரச அதிகாரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளின் வாழ்த்துரைகளின் தொகுப்பு ஒளிபரப்பப்பட்டது.
அதனைத்தொடர்ந்து நன்றியுரையினை சமூகம் குழுமத்தினர் சார்பாக திருமதி க.யசோதா நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில், மக்கள் பணிமனை தலைவர் பி.ஏ.எஸ்.சுபியான் மௌலவி, சமூக சேவையாளரும் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தின் உரிமையாளருளாமான செ.திருமாறன், வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள், சமூகம் மீடியாவின் செய்தியாளர்கள், யாழ். விழிப்புணர்வற்றோர் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் உறவுகள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
















