
சவூதி அரேபியா, பெப்.20
சவூதி அரேபியாவில் ரயில் சாரதிகள் பணிக்காக சுமார் 28,000 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.
சவூதி அரேபியாவிலுள்ள ஸ்பானிய ரயில் நிறுவனமான ரென்பே, ரயில் சாரதி பணிகளுக்கு பெண்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியிருந்தது.
30 பெண்கள் இப்பணிக்கு தெரிவு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிகரமான விண்ணப்பதாரிகள் கொடுப்பனவுடனான ஒருவருட கால பயிற்சியின் பின்னர் புனித மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு இடையிலான அதிவேக ரயில்களை இயக்குவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி 30 பதவிகளுக்கு சுமார் 28,000 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர் என ரென்பே நிறுவனம் தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் ரயில் சாரதி பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.