
கொழும்பு, பெப் 20: நாட்டில் மீண்டும் பாதாள கும்பல்களின் அராஜகரம் தலை தூக்கியுள்ளது என்று கொழும்பு பேராயர் மால்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
களுத்துறை லூர்து அன்னை தேவாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த விருந்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் “நாட்டில் கொலை, களவு, அநீதி, ஊழல், பயங்கரவாதம் என அனைத்தும் மீண்டும் தலைதூக்கியுள்ளது. கடந்த சில நாட்களாக மத்துகம, களுத்துறை மற்றும் பாணந்துறை பிரதேசங்களை மையப்படுத்தி பாதாள உலகக் குழுவினர் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மத்துகம பிரதேசத்திலும் இவ்வாறான பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மேலும், மத்துகம, களுத்துறை மற்றும் பாணந்துறை பிரதேசங்களில் பாதாள உலக கும்பல்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இதை தடுக்க வேண்டியது எமது கடமை என்றார் அவர்.