
இலங்கை தமிழர் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாக தெரிவும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ்ச் சங்க கலாவினோதன் மண்டபத்தில் இடம்பெற்றது.
அதன்படி இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய தலைவராக எஸ்.ஸ்ரீகஜன் தெரிவு செய்யப்பட்டதுடன், செயலாளராக கே.ஜெயந்திரன் ஆகியோரும் உபதலைவர்களாக லியோ நிரோஷ தர்ஷனும் தர்மினி பத்மநாதனும் உப செயலாளராக சு.சிவசண்முகநாதனும் தெரிவு செய்யப்பட்டனர்.
பொருளாளராக ப.விக்னேஸ்வரன் உப பொருளாளராக எஸ் வாஸ் கூஞ்ஞை ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர். நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ஆர். சிவராஜா , எஸ். அனந்த் பால கிட்ணர் , என். ஜெயகாந்தன் , வீ.பிரியதர்ஷன் , ஆர். சேதுராமன் , கி. லக்ஸ்மன் சிசில் , பிரியங்கா சந்திரசேகரம் , கே.ஹரேந்திரன் , கே. பிரசன்னகுமார் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
மேலும் வடமாகாண இணைப்பாளராக கணபதி சர்வானந்தா, கிழக்கு மாகாண இணைப்பாளராக எஸ். சரவணன் மற்றும் மலையக இணைப்பாளராக சிவலிங்கம் சிவகுமாரன் ஆகியோருடன் ஒன்றியத்தின் மேலதிக இணைப்பாளராக தர்மினி பத்மநாதனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.