
முஸ்லிம் பெண் ஒருவரின் கணவர் மரணித்த பின்பு வழங்கப்படும் நான்கு மாதங்கள் 10 நாள் விடுமுறை (இத்தா), விவாகரத்து வழங்கப்பட்ட பின் வழங்கப்படும் 3 மாத கால இத்தா விடுமுறை என்பன இரத்துச் செய்யப்பட்டு அரச சேவையிலுள்ள ஏனைய இன பெண்களுக்கு வழங்கப்படும் விடுமுறை மாத்திரமே முஸ்லிம் பெண் அரச ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ‘ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி’ தனது இறுதி அறிக்கையில் சிபாரிசு செய்துள்ளது.





