
Rasi Palan 21th February 2022: ராசிபலன் நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
அன்பர்களுக்கு இன்றைய நாள் மிக நல்ல நாளாக இருக்கும். சொந்தத் தொழிலில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பாராட்டுரைகள் கிடைக்கும். வேலை மாற்றம் செய்ய நினைப்பவர்களுக்கும் புதிய வேலை தேடுபவர்களுக்கும் பல புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும்.
சுப காரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தையில் இருப்பவர்களுக்கு நல்ல முடிவை எட்டும் நாளாக இன்றைய நாள் இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட செயல்களில் வெற்றி கிடைக்கும். அரசு துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு ஏற்றம் மிகுந்த நாளாக இன்றைய நாள் அமைகிறது. கணவன் மனைவி உறவு மேம்படும் உடல் நலம் சீராக இருந்துவரும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
ரிஷபம்
அன்பர்களுக்கு உத்தியோகம் மற்றும் தொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்றம் மிகுந்த நாளாக இன்றைய நாள் அமையும். கணவன் மனைவி உறவு சீராகும் குடும்பத்தில் ஒற்றுமை நிகழும். சற்று பற்றாக்குறை இருந்து வந்தாலும் அனைத்தையும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். மாணவர்களின் கல்வியில் சற்று கவனம் தேவை.
சேவை தொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்ற மிகுந்த காலம் ஆகும். விஷுவல் மீடியா மற்றும் பிரிண்டிங் மீடியா துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. பல நல்ல தகவல்களும் மேலதிகாரிகளின் பாராட்டு உரைகளும் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. பெண்களுக்கு நல்ல நாளாக அமையும்.
மிதுனம்
அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகவே இருக்கும். வருமானத்தை அதிகரிக்கும் சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு ஆதாயம் தரும். நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சுய தொழிலில் வெற்றி காண்பார்கள்.
சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு. உடல் நலம் சீராக இருந்துவரும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமை சீராக இருக்கும் குழந்தைகளின் கல்விச் செலவுகள் சற்று அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் செலவுகளும் அலைச்சலும் உண்டாக வாய்ப்பு இருக்கிறது. அரசியலில் இருப்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக வேண்டிவரும். எதிர்பார்த்த பணம் வரும்.
கடகம்
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். வாகன வகையில் ஆதாயம் கிடைக்கும் சொத்து சம்பந்தப்பட்ட வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஆதாயமடைவீர்கள்.
கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருந்து வரும் சுபச்செலவுகள் உங்களைத் தேடி வரும் பிற்பகலுக்கு மேல் சற்று அலைச்சல் கூடும். இருப்பினும் வெற்றிகரமாக எதிர்கொண்டு சாதிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பாராட்டுரைகள் கிடைக்கப் பெறுவீர்கள் சொந்த தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவர்.
வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு பெண்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாளாகும். தாங்கள் பிறந்த வீட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். மாமன் வகை மற்றும் உறவினர் வகையில் ஆதாயம் உண்டு.
சிம்மம்
அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். குடும்ப ஒற்றுமையை மேம்படுத்தும் கணவன் மனைவி உறவு சீராக இருந்துவரும். உடல்நலனில் சிறுசிறு தொல்லைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்புகள் என்று எதுவும் இல்லை.
அரசுத்துறை மற்றும் வாகன துறை தொடர்பான தொழிலில் இருப்பவர்களுக்கும் விஷுவல் மீடியாவில் இருப்பவர்களுக்கும் தங்களுடைய பணிகளில் சற்று கால தாமதம் அல்லது தொய்வு ஏற்பட வாய்ப்பு உண்டு. இருப்பினும் இவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்வீர்கள் நண்பர்களால் ஆதாயம் உண்டு.
உறவினர்களால் செலவினங்கள் இருக்கும். பெண்களுக்கு நல்ல நாளாக இன்றைய நாள் அமையும். ஆடை ஆபரணம் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது தொடர்பான சிந்தனைகளும் செயல்பாடுகளும் அமையும் நாளாக இன்றைய நாள் இருக்கிறது.
கன்னி
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக உள்ளது புதிய தொழில் முயற்சிகளை பற்றி சிந்திப்பீர்கள். புதிய வேலைவாய்ப்புகளை பற்றிய சிந்தனை மனதை ஆட்கொள்ளும். தற்போது பணிபுரியும் இடம் சற்று மன அழுத்தம் மிகுந்ததாக இருக்க வாய்ப்பு உண்டு. எனவே புதிய பணிகளை பற்றிய சிந்தனைகள் மேலோங்கும்.
கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும் பெண்களுக்கு உயர்வான நாளாகும் ஆடை ஆபரணங்கள் சேர்க்கை மற்றும் வாகன வகையில் செலவினங்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு கல்வியில் சற்று கூடுதல் கவனம் தேவை. காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு மன மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு.
துலாம்
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக உள்ளது. எதிர்பாராத தனவரவையும் சொத்து வாகனம் சம்பந்தப்பட்ட வகையில் ஆதாயத்தையும் உணவு தொழில் செய்பவர்களுக்கு நல்ல ஆதாயத்தைத் தரக்கூடிய தினமாக இன்றைய நாள் அமையும். புதிய கடன்கள் கிடைக்கும்.
பற்றாக்குறையை வெற்றிகரமாக எதிர்நோக்கி காரியத்தை சாதிப்பீர்கள். குழந்தைகளால் ஆதாயம் உண்டாகும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன மகிழ்ச்சி கிடைக்கும். நாளின் பிற்பகுதியில் சற்று அலைச்சல் இருந்தாலும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
உடன்பிறந்தோர் மற்றும் மூத்தவருடன் சுமுகமான உறவு நிலை நிலவும் வழக்கு போன்றவற்றில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் சினிமா சின்னதிரை வாகனம் திரவப் பொருட்கள் சார்ந்த வியாபாரங்களில் இருப்பவர்களுக்கும் சேவை தொழிலில் இருப்பவர்களுக்கும் இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும்.
விருச்சிகம்
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக உள்ளது வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு தங்களது குடும்பங்களில் இருந்து நல்ல செய்திகள் வரும் சுப காரியத்தை பற்றி சிந்தித்து கொண்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
வெளிநாடு மற்றும் வெளியூர் சார்ந்த பிரயாணங்களை பற்றி சிந்தனை கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும் மாணவர்களின் கல்வி மேம்படும்.
தாயாரின் உடல் ஆரோக்கியம் சற்று பின்னடைவு ஏற்பட்டு மேன்மையடையும் மருத்துவத்துறை இரும்புத் தொழில் சேவை தொழில் மற்றும் வாகன துறையில் இருப்பவர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும்.
தனுசு
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக உள்ளது எதிர்பார்த்த பணம் வரும் போட்டி பந்தயம் லாபம் தரும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் பெண்களுக்கு உகந்த நாளாக இன்றைய நாள் உள்ளது. திருமண காரியங்கள் வெற்றி பெறும் கணவன் மனைவி உறவு அன்னியோன்னியமாக இருக்கும்.
மாணவர்களின் கல்வி பளிச்சிடும் அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றத்தை தரும் நாள் இன்றைய நாள் ஆகும் சொத்து வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்பாடுகளில் இருப்பவர்களுக்கு லாபம் தரும் நாளாக இன்றைய நாள் அமையும்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. மாமன் வர்க்கத்தார் மற்றும் தாய் வழி சொந்த பந்தங்களுடன் சற்று மன வருத்தங்கள் ஏற்படலாம். பொறுமையைக் கைக் கொள்வது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது விவசாயத் தொழில் செய்பவர்களுக்கு ஏற்ற மிகுந்த நாளாக இன்றைய நாள் அமையும்.
மகரம்
அன்பர்களுக்கு இன்றைய நாள் மிக நல்ல நாளாகவே இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வகையிலும் மாணவர்களின் கல்வி சம்பந்தப்பட்ட வகையிலும் நல்ல முன்னேற்றங்களை தருவார். எதிர்பார்த்த பணம் வரும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு மேன்மையடையும் நாளாக இன்றைய நாள் அமையும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவர். வெளிநாடு அல்லது வெளியூர் பிரயாணங்கள் பற்றி திட்டமிட்டு கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். புது தொழில் முயற்சிகள் வெற்றியடையும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு.
கும்பம்
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும் புது காரியம் புது முயற்சிகள் போன்றவற்றில் ஈடுபடுவதைத் தவிர்க்கலாம் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும். அதை சற்று தள்ளி வைக்கலாம் கணவன் மனைவி ஒற்றுமையில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.
பேச்சை குறைத்துக்கொண்டு பொறுமையை கடைப்பிடிப்பது குடும்ப ஒற்றுமையை மட்டுமல்ல உங்களுடைய ஒற்றுமையையும் மன அமைதியையும் காக்கும் சொந்த தொழிலில் இருப்பவர்களுக்கு பற்றாக்குறை இருந்து வரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் வெற்றிகரமாக எதிர்கொள்வீர்கள். வீண் அலைச்சல் அதிகமாக வாய்ப்பு உண்டு. எனவே தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் இரு முறை சிந்தித்து செய்வது நல்லது.
மீனம்
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். தனவரவு உண்டாகும். குடும்பத்தில் அமைதி தவழும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் பிற்பகலுக்கு மேல் உத்தியோகத்தில் சற்று அலைச்சல்களைக் கொடுக்கும்.
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு பற்றாக்குறை இருந்து வந்தாலும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட காரியங்களில் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு.
அரசியல்வாதிகளுக்கு சாதகமான சூழ்நிலைகளை எதிர் நோக்குகிறார்கள். சுற்றுலா தொழில் வங்கித்தொழில் உணவு தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.