இலங்கை மக்களுக்கு சுகாதாரத்துறை அறிவித்துள்ள மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் விரைவில் முகக் கவசமின்றி நிகழ்வு நடத்துவது உட்பட நாட்டை முழுமையாக திறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதென சுகாதார பணிப்பாhளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொண்டதன் பின்னர் இலங்கையின் அனைத்து மக்களினதும் நோய் எதிர்ப்பு சக்தி எதிர்பார்த்த மட்டத்தை எட்டினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 1,231 புதிய கொரோனா தொற்றுகள் அடையாளம் காணப்பட்டதன் மூலம், நாட்டில் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 636,837 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *