
கொழும்பு, பெப் 21: கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவில் கலந்து கொள்ள குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலை காரணமாக இந்தியா, இலங்கையிலிருந்து வரும் யாத்ரீகர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் ஆங்கில மொழி இணையத்தளம் ஒன்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளது.
கச்சத்தீவு திருவிழா 2022 மார்ச் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.