
கொழும்பு, பெப் 21: திங்கட்கிழமை நாடாளாவிய ரீதியில் ஒரு மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்படவுள்ளது. இதற்கான அனுமதியை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL ) வழங்கியுள்ளது.
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இணங்க, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று PUCSL தெரிவித்துள்ளது.
இதன்படி, திங்கள்கிழமை காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை நாடளாவிய ரீதியில் ஒரு மணிநேரம் சுழற்சி முறையில் மின்வெட்டு அமல்படுத்தப்படவுள்ளது.
ஆனால், தென் மாகாணத்தில் காலை 8.30 மணி முதல் 4.30 மணிவரை 3 மணி நேர மின்வெட்டு அமலில் இருக்கும் என்று இலங்கை மின்சார சபை ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.