
கொழும்பு, பெப் 21: 80,000 மில்லியன் திறைசேரி உண்டியல்கள் வரும் புதன்கிழமை ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளதாக இலங்கை மத்திய வாங்கி தெரிவித்துள்ளது.
அரச பத்திரங்களில் முதன்மை விற்பனையாளர்களிடமிருந்து விலைமனுக்கள் கோரப்படுகின்றன என்றும், இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்படும் இலத்திரனியல் ஏல வசதியின் ஊடாகவே விலைமனுக்கள் கோரப்பட வேண்டும் என்றும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.