
கொழும்பு, பெப் 21: நான் மின்சாராத் துறை அமைச்சராக இருந்திருந்தால், நாட்டுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்கான முறையான பொறிமுறையை நடைமுறைப்படுத்தி, நாட்டுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கியிருப்பேன் என்று சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டையில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் “இலங்கையில் மின் நெருக்கடி ஏற்பட, அரசாங்கம் அண்மைக்காலத்தில் புதிய மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்காததே காரணமாகும். அரசாங்கத்திற்கு நீண்டகாலத் திட்டம் இருக்க வேண்டும். அன்றாடப் பிரச்சினைகளை எதிர்கொள்வதை விடுத்து முன்னோக்கி செல்ல திட்டமிட வேண்டும் என்றார் அவர்.