ஈழத்தமிழ் யுவதி சாதனாவிற்கு ஐக்கிய நாடுகள் சபையில் கிடைத்த பெரும் அங்கிகாரம்….!

கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடந்த மாதிரி ஐக்கிய நாடுகள் சபை (model united state) மாநாட்டில் நெதர்லாந்து நாட்டு இளையோர் சார்பில் ஈழத்தமிழரான ஜி. சாதனா தெரிவு செய்யப்பட்டு கலந்துகொண்டார்.

மாதிரி ஐக்கிய நாடுகள் சபை MUN என்பது இளையோரின் பங்களிப்பு பெறும் அனைத்துலக நாடுகள் சபை வடிவம். எதிர்காலத்தில் உருவாகக் கூடிய அரசியல், சமுக, தொழில் நுட்ப, சுகாதார மற்றும் சூழலியல் போன்ற பல்வேறு துறை சார் பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் ஆராயும் மாநாடு.

எதிர்நோக்கும் பிரச்சனையில் இருந்து எதிர்பார்க்கப்படும் பிரச்சனை வரை எடுத்து ஆராயப்படும் மாநாடு. இளைய தலைமுறையின் உலகம் தழுவிய பார்வைக்கான செயல்பாட்டு வடிவமாக இது இருக்கிறது.

அதே சமயம் இளைய தலைமுறையின் சிந்தனை வெளிப்பாட்டை பெற்றுக்கொள்ளும் பொறிமுறையாகவும் இது நோக்கப்படுகிறது.

இம்மாநாட்டில் உலகின் எதிர்கால இனத்துவ முரண்பாடு பற்றிய விவாத மத்திய குழு வளவாளராக ஜி.சாதனா கலந்து கொண்டமை குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *