
கொழும்பு, பெப்.21
அரச நிறுவனங்களில் மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது உள்ளிட்ட ஆலோசனைகள் அடங்கிய விசேட சுற்றுநிருபம் இன்றைய தினம் வெளியிடப்படவுள்ளது.
அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது, அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகன பாவனை தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்படும். அதேநேரம், தனியார்த்துறையின் சேவையாளர்களின் அலுவலக நேரத்தை திருத்துவது தொடர்பான தேசிய தொழில் ஆலோசனை சபை கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளது.
பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் தனியார் நிறுவன முதலாளிமார் மற்றும் தொழில் ஆணையாளர் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.