பல எதிர்ப்புகளை தாண்டி யாழ் வந்தார் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு இன்று வியாழக்கிழமை (4) மாலை 4 மணியளவில் வந்தடைந்தார்.

யாழ்ப்பாணம் சென்ஜேம்ஸ் பாடசாலை அருகே உள்ள மைதானத்தில் உலங்குவானூர்தி மூலம் சென்றடைந்த ஜனாதிபதி, அங்கிருந்து வாகன தொடரணியாக யாழ். மாவட்ட செயலகத்தை சென்றடைந்தார்.

 மூன்று பேர்  கைது

வடக்கு மாகாணத்திற்கு நான்கு நாள் விஜயமாக சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.

ஜனாதிபதியின் பங்கேற்புடன் யாழ் மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஆரம்பமானது.

இதேவேளை, யாழ்ப்பாணம் பழைய பூங்காவுக்கு அருகில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.

அத்துடன் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பேருந்தில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும் யாழில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.

The post பல எதிர்ப்புகளை தாண்டி யாழ் வந்தார் ஜனாதிபதி! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *