குருநாகல் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் திருகோணமலை – தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.எல்.அப்துல் ரஸாக் காயமடைந்து அதி சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தோப்பூரிருந்து – கொழும்பு நோக்கி தனது குடும்பத்தோடு காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவர் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டவர். அத்தோடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கிய பதவிகளை வகித்தவர்.
ரிஷாத் பதியுதீன் அமைச்சராக இருந்தபோது அமைச்சின் கீழிருந்த கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் முகாமைத்துவ பணிப்பாளர் சபையின் ஒருவராக இறுதியாக நியமிக்கப்பட்டு பதவி வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
