கிழக்கின் கல்முனையில் இடம்பெற்றதாக கூறப்படும் ஆட் கடத்தல் முயற்சி தொடர்பில், தாம் நாடாளுமன்றில் விளக்கமளிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி மாலை, புலனாய்வுப் பிரிவினர் குழுவொன்று, பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி பிரசாரம் செய்து வந்த அருள் ஞானமூர்த்தி நிதர்சனைக் கடத்த முயற்சித்ததாக சாணக்கியன் குற்றம் சுமத்தியிருந்தார்.
எனினும் அவரின் கூற்றை, இலங்கையின் காவல்துறை தலைமையகம் மறுத்திருந்தது.
குறித்த சம்பவம் தனிப்பட்ட சம்பவம் என்று தலைமையகம் குறிப்பிட்டிருந்தது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என்று வலியுறுத்தலால், அரசாங்கம் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவும், இந்த கொடூரமான சட்டத்தை நீக்குமாறு அண்மையில் கோரியிருந்தது.
இந்தநிலையில் அரசாங்கத்துக்கு பாரிய எதிர்பாக மாறியுள்ள கர்தினால் மெல்கம் ரஞ்சித்தும் பயங்கரவாத தடைச்சட்டம் ரத்துச்செய்யப்படவேண்டும் என்று மனுவில் கையெழுத்திட்டுள்ளார்.
இதேவேளை பெப்ரவரி 18 அன்று வெளியிடப்பட்ட காவல்துறை தலைமையக அறிக்கையை சவாலுக்கு உட்படுத்தியுள்ள சாணக்கியன், இந்த சம்பவத்தை ஆராய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தின் மற்றும் பிற சம்பந்தப்பட்ட தரப்பினரின் பொறுப்பை வலியுறுத்தியுள்ளார்.
