வன ஜீவராசிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்…!samugammedia

வன ஜீவராசிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம்(05) போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் இடம்பெற்றது. 

இதன்போது  காட்டு யானைகளின்  தாக்குதலினால் உயிரிழந்த நபர்கள்,  சேதமடைந்த பயிர்கள் மற்றும்  வீடுகள் என்பவற்றின்  குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு பிரதேச செயலாளரினால் நிவாரணமாக காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டன.

வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் இந்நிவாரண தொகையினை பிரயோசனமான முறையில் பயன்படுத்துமாறு இதன்போது ஆலோசனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *