
தூத்துக்குடி, பெப்..21
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை தமிழக க்யூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
கடற்கரையில் நின்று கொண்டிருந்த படகில் இருந்த 8 பேர் கொண்ட கும்பலை சுற்றிவளைத்து பொலிஸார் சோதனை செய்ததில் அவர்களிடம் 2 கிலோ வீதம் 5 பாக்கெட்டுகளில் கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் என்னும் ஐஸ் போதைப் பொருளை வைத்திருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக கீழவைப்பார் பரலோக மாதா கோவில் தெருவைச் சேர்ந்த இருதய வாஸ் , கிங் பேன், சிலுவை,அஸ்வின், வினிஸ்டன், சுபாஷ், கபிலன், சைமோன், ஆகிய 8 பேரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவர்களிடம் இருந்த ரூ.30கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.