
மன்னார், பெப்.21
மன்னாரிலுள்ள புனித பூமியொன்றை அண்மித்த பகுதியில் ஆளில்லா கமரா பறக்கவிடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு ஆளில்லா கமராவை பறக்கவிட்ட நபர்களை சட்டத்திற்கு முன் நிறுத்துமாறு சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.
2010ம் ஆண்டு 14ம் இலக்க சிவில் விமான சேவைகள் சட்டத்தின் பிரகாரம், தேவையற்ற விதத்தில் ஆளில்லா கமராக்களை பறக்கவிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இலங்கைக்குள் ஆளில்லா கமராவை பயன்படுத்த சிவில் விமான சேவை அதிகார சபையில் அனுமதி எடுக்கப்பட வேண்டியது கட்டாயமானதாகும்.