‘கமாண்டர்ஸ் கோல்ஃப் கிண்ண போட்டித் தொடர் 2024’ – 11ஆவது அத்தியாயம் விரைவில் ஆரம்பம்!

நடப்பு ஆண்டுக்கான கமாண்டர்ஸ் கோல்ஃப் கிண்ண போட்டித் தொடர், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமாகவுள்ளது.

முதன்மையான நிகழ்வான கமாண்டர்ஸ் கோல்ஃப் கிண்ண போட்டித் தொடர், திருகோணமலை சீனக்குடாவில் உள்ள கண்கவர் ஈகிள்ஸ் கோல்ஃப் லிங்க்ஸில், எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இலங்கை விமானப்படையால் நடத்தப்படும் கமாண்டர்ஸ் கோல்ஃப் கிண்ண போட்டித் தொடருக்கு பிரதான பிரத்தியேக அனுசரணையாளராக டயலொக் எண்டர்பிரைசஸ் உதவியளிக்கின்றது.

2013ஆம் ஆண்டு தொடக்கம் ஆரம்பிக்கப்பட்ட இப்போட்டித்தொடரின், 11ஆவது அத்தியாயம் இதுவாகும். மேலும் இந்த நிகழ்வு இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெறுகிறது

இதில் நாடு முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள 100க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் கோல்ப் வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

இதுதவிர, ஈகிள்ஸ் சேலஞ்ச் டிராபி, ஆயுதப் படைகளில் பணியாற்றும் உறுப்பினர்களில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் மகத்தான விருதாகும். இது முப்படை கோல்ப் வீரர்களுக்கு (ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும்) வழங்கப்படும் முக்கிய கிண்ணமாகும்.
எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறும் விருது விழாவின் போது இந்த சிறப்புமிக்க கிண்ணகள், மற்ற பட்டங்கள் மற்றும் பாராட்டுகள் அவர்களுக்கு வழங்கப்படும்.

உள்ளூர் மற்றும் சர்வதேச ஆண் மற்றும் பெண் கோல்ஃப் ஆர்வலர்கள், இலங்கை சுற்றுலாத்துறையின் குறிப்பிடத்தக்க அம்சமான கமாண்டர்ஸ் கோல்ஃப் கிண்ண போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ளனர்.

விளையாட்டு சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான மூலோபாய முன்முயற்சியின் ஒரு பகுதியாக, அனுராதபுரம், கொக்கலா மற்றும் சீனக்குடா உள்ளிட்ட முக்கிய இடங்களில் கோல்ஃப் மைதானங்களை விமானப்படை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *