உள் நாட்டில் பால் உற்பத்தியை வலுப்படுத்த நடவடிக்கை..!samugammedia

இலங்கையில் நாட்டிற்குத் தேவையான பால் உற்பத்திக்காக சிறிய மற்றும் நடுத்தர பண்ணையாளர்களை வலுப்படுத்துவதற்கு விவசாயத் திணைக்களம் தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாக கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி. ஹேரத் தெரிவிதுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மேலும்  அவர் தெரிவிக்கையில், தற்போதுள்ள 06 பால் உற்பத்தி நிலையங்களுக்கு மேலதிகமாக மேலும் 02 உற்பத்தி நிலையங்களைத் திறப்பதற்கு அவசியமான பேச்சுவார்த்தைகள் பிரான்ஸ் அரசாங்கத்துடன் நடத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், நாட்டிற்குத் தேவையான பால் உற்பத்தியில் நாம் இன்னும் தன்னிறைவு அடையவில்லை .

தேசிய தேவையில் 40% மாத்திரமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. எஞ்சிய 60% இறக்குமதி செய்வதற்கு 34 பில்லியன் ரூபாவுக்கு மேல் செலவிட வேண்டியுள்ளது. தற்போதைய நிலையில் பால் உற்பத்திக்கு சிறிய மற்றும் நடுத்தர பண்ணையாளர்களை வலுப்படுத்த விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது என தெரிவித்துள்ளதுடன்,  மேலும் வாரியபொல, வென்னப்புவ, அத்தனகல்ல, கொழும்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய இடங்களில் பிரான்ஸ் நாட்டின் ஆதரவுடன் 06 பால் உற்பத்தி நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் இவ்வாறான தொழிற்சாலைகளை ஆரம்பிக்க உதவுமாறு பிரான்ஸ் அரசாங்கத்திற்கு எமது அமைச்சு பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *