ஊடகம் என்பது ஒரு கொள்கையுடன் பயணிக்க வேண்டும் என சர்வமத தலைவர்களில் ஒருவரான வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
சமூகம் மீடியா குழுமத்தின் புதிய கட்டட திறப்புவிழா யாழில் நேற்று இடம்பெற்றது. நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒரு கொள்கையுடன் பயணித்தாலே அதனுடன் சேர்ந்து ஏனைய விடயங்கள் நேர்கோட்டில் செல்லும். பல்வேறு தியாகங்கள், அச்சுறுத்தல்கள் மத்தியில் மிகவும் கடினமான மக்கள் பணியாக இது உள்ளது.
இது ஒரு சாதாரண விடயம் அல்ல. உண்மையை உரக்க கூறுவதில் எந்த தீமையும் வரப் போவதில்லை. மக்களை நல்வழிப்படுத்தும் பணியில் ஊடகங்கள் பணியாற்ற வேண்டும்.
ஒரு பணி முழுமை அடைய வேண்டும் என்றால் அதில் உண்மை நேர்மை இருக்க வேண்டும். இவ்வளவு தியாகங்கள் செய்த ஊடக வியலாளர்களின் உயிருக்கு ஒரு அர்த்தம் வேண்டும். விடுதலை வேண்டும். – என்றார்.