யாழ் வடமராட்சி பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய இழுவைபடகுகளினால் பெறுமதியான வலைகள் அறுத்து அழிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்றையதினம் இரவு பருத்தித்துறை கடற்கரையை அண்மித்த பகுதியில் இந்திய இழுவைப் படகுகள் சட்டவிரோதமாக உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பருத்தித்துறை, இன்பருட்டி, சுப்பர்மடம், சக்கோட்டை மீனவர்களின் 70 இலட்சம் பெறுமதியான வலைகள் அறுத்து அழிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய இழுவைப்படகுகள் இலங்கை எல்லை தாண்டி வடமராட்சி கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்ததாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் போது கரையில் இருந்து சுமார் 3 கடல் மைல் அளவில் இவ்வாறு இந்திய இழுவைப்படகுகள் மின்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கின்றனர்.
இதன் போது 10வரையான மீனவர்களது வலைகள் அறுத்து நாசம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





