
தமிழ் ஊடகப் பரப்புகள் இன்னமும் செம்மையாவதற்கு, இவ்வாறான ஊடகங்கள் தொடர்ச்சியாக தங்கள் பணிகளை சிறப்பாக ஆற்ற வேண்டும் என யாழ் பல்கலைக் கழகத்தின் ஊடக கற்கை நெறியின் விரிவுரையாளர் ரகுராம் தெரிவித்துள்ளார்.
சமூகம் மீடியா குழுமத்தின் புதிய கட்டட திறப்புவிழா யாழில் நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒரு தொழில் துறையாக முன்னேற வேண்டும். இதனை அடிப்படையாகக் கொண்டு அரசுடன் இந்த விடயங்களை எடுத்துச் கூறி தொழில் துறையாக முன்னேற்ற நடவடிக்கை எடுக்கலாம்.
தொழில் துறையாக முன்னேற்றம் அடைந்தால் தான் ஊடக கற்கை நெறி பட்டதாரிகளும் பயன்பெறுவர்.
சமூகம் மீடியா யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஊடாக துறையில் சிறந்த சந்தர்ப்பங்களை வழங்கி வருகிறது. யாழ் பல்கலையின் ஊடகத்துறையும் இப்போது வளர்ச்சி கண்டு வருகிறது. – என்றார்.