
அவுஸ்திரேலியா, பெப்.21
.கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மூடப்பட்ட அவுஸ்திரேலியா தனது எல்லையை 704 நாட்களின் பின்னர் திறந்ததை தொடர்ந்து சிட்னி விமான நிலையத்தில் மக்கள் தமது சந்தேசத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அவுஸ்திரேலியா சர்வதேச எல்லையை திறந்ததை தொடர்ந்து குடும்பங்கள் மீண்டும் இணைந்ததால் சிட்னி விமானநிலையத்தில் கண்ணீரும், இசையும், மகிச்சியும் காணப்பட்டது.
சிட்னி விமான நிலையத்தில் வர்த்தக சுற்றுலாத்துறை தொழில்துறை அமைச்சர் டன் டெஹான் கூறியதாவது, சில வருட முடக்கலினால் பாதிக்கப்பட்ட அவுஸ்திரேலிய சுற்றுலாத்துறைக்கு இன்று மிகவும் மகிழ்ச்சிகரமான நாள்.
மக்கள் ஐக்கியப்படும் விதத்தை பார்ப்பது – கட்டிதழுவுதல்- முத்தங்கள் கண்ணீரை பார்ப்பது அற்புதமாக உள்ளது. எதிர்காலம் ஒளிமயமானதாக காணப்படுகின்றது.
எல்லைகளை திறந்து வைப்பதற்கு நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம்.
சிட்னி விமான நிலையத்திற்கு இன்று காலை 6.20 மணிக்கு முதலில் லொஸ் ஏஞ்சல்சில் இருந்து குவண்டாஸ் விமானம் வந்து சேர்ந்ததை தொடர்ந்து சர்வதேச போக்குவரத்திற்கான கட்டுப்பாடுகளும் தடைகளும் முடிவிற்கு வந்தன.
இன்று 56 விமானங்கள் அவுஸ்திரேலியா வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது இவற்றில் அனேகமானவை சிட்னி விமானநிலையத்திற்கே வரவுள்ளன. நியுசவுத்வேல்ஸ் மீண்டும் உலகத்துடன் இணைந்துகொண்டதால் காற்றில் சலசலப்பும் உற்சாகமும் காணப்படுகின்றது என்றார்.