
பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கில், அரச தரப்பின் பிரதான சாட்சியாளர்களான, புத்தளம், அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையின் முன்னாள் மாணவர்கள் எனக் கூறப்படும் மொஹம்மட் மலிக், மொஹம்மட் பெளஸான் ஆகியோருக்கு, சட்டத்தரணிகளை சி.ஐ.டி. அதிகாரிகளே ஏற்பாடு செய்து கொடுத்தமை தொடர்பில் அறிந்திருந்தால், ஒருபோதும் அவ்விருவரின் வாக்கு மூலங்களையும் தான் பதிவு செய்திருக்க மாட்டேன் என மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க புத்தளம் மேல் நீதிமன்றில் சாட்சியம் அளித்தார்.




