மைத்திரியின் மகள் வீட்டில் சிக்கல்…! மாயமாக மறைந்த முக்கிய பொருட்கள்…!பொலிஸார் விசாரணை…! samugammedia

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் பத்தரமுல்லவின் விக்ரமசிங்க புர இரண்டு மாடி வீடு உடைக்கப்பட்டு சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் திருடப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருடப்பட்ட பொருட்களில் வீட்டின் அலமாரியில் இருந்த 1,50,000 ரூபா மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட ஒட்டகச் சிலை, ஸ்மார்ட் வாட்ச், 8 தங்க முலாம் பூசப்பட்ட சிங்கப்பூர் நாணயங்கள்,  உணவுப் பொருட்கள் மற்றும் பள்ளி புத்தகப் பை ஆகியவை உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் கணவர் கொழும்பில் உள்ள வீட்டுக்கு வந்தபோது, ​​வீடு திருடர்களால் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *