சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த மாணவன் சாதனை…!samugammedia

சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் புத்தளம் மதுரங்குளி – கனமூலையைச் சேர்ந்த அஷ்ஷெய்க் – அல் – ஹாபிழ் நஸ்மிர் நஸ்ருதீன் (தீனி) முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
பாணந்துறை – தீனியா அரபுக் கல்லூரியில் அல்ஹாபிழ் மற்றும் அல் ஆலிம் பட்டத்தை பெற்றுக் கொண்ட இவர், பாக்கிஸ்தான் , கராச்சியிலுள்ள ஜாமியா பின்னூரியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி இஸ்லாமிய ஷரீஆ, அல்குர்ஆன் சம்பந்தமான மேற்படிப்பை தொடர்கிறார்.
இந்நிலையில், பாகிஸ்தான், கராச்சியில் நேற்று (21) நடைபெற்ற ஷேய்க் அப்துல் ஹலீம் ஞாபகார்த்த சர்வதேச அல்குர்ஆன் மனனப்போட்டியில் (10 ஜுசுக்கள்) கலந்துகொண்டு மிகவும் அழகான முறையில் திறமையை வெளிக்காட்டிய இவர், முதலாம் இடத்தைப் பெற்று இலங்கை நாட்டிற்கும், ஊருக்கும் பெருமை  சேர்த்துள்ளார்.
இவ்வாறு அல்குர்ஆன் மனனப் போட்டியில் வெற்றிபெற்ற அஷ்ஷெய்க் – அல் – ஹாபிழ் நஸ்மிர் நஸ்ருதீன் (தீனி) அவர்களை ஜாமியா பின்னூரியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் நினைவுச் சின்னம், சான்றிதழ் மற்றும் பணப் பரிசு என்பவற்றை வழங்கி கௌரவித்துள்ளது.
புத்தளம் தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட கணமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 7 வரை கல்வி கற்ற இவர், இலங்கையில் பல இஸ்லாமிய போட்டிகளில் பங்குபற்றி திறைமையை வெளிக்காட்டி சான்றிதழ்கள், பரிசில்களையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *