நிறைய பேரை தொந்தரவு செய்யும் பிரச்சனை.. எப்படி சமாளிப்பது?

பல முடி பிரச்சனைகளில், ஸ்கால்ப்னே (scalp and acne) – நிறைய பேரை தொந்தரவு செய்யும் ஒன்றாகும். இது அவர்களின் தலைமுடி அல்லது உச்சந்தலையின் அருகே பருவை உருவாக்குகிறது.

தோல் மருத்துவர் மானசி ஷிரோலிகர் கூற்றுப்படி, உச்சந்தலையில் உள்ள பருக்கள் – ஸ்கால்ப் ஃபோலிகுலிடிஸ் (scalp folliculitis) என்றும் அழைக்கப்படுகிறது- இது ஒரு பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்று காரணமாக மயிர்க்கால்கள் (follicles) வீக்கமடையும் ஒரு நிலை. அவை ஈஸ்ட்கள் அல்லது பூச்சிகள் ஆகியவற்றாலும் ஏற்படலாம்.

“ஸ்கால்ப் ஃபோலிகுலிடிஸ்’ முதலில் சிறிய புடைப்புகளாகத் தொடங்குகிறது, ஆனால் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், குணமடையாத, கெட்டியான புண்களாக மாறும்.

மிகவும் பொதுவான அறிகுறிகளில் அரிப்பு, சிறிய வொய்ட்-ஹெட்ஸ் உடன் கூடிய சிறிய புடைப்புகள், சீழ் நிரம்பிய புண்கள், வலி ​, எரிச்சல் மற்றும் அரிப்பு ஆகியவை அடங்கும், ”என்று மருத்துவர் கூறுகிறார்.

மயிர்க்கால்களுக்கு சேதம் விளைவிக்கும்’ முடியை இறுக்கி இழுப்பது, தலையில் அரிப்பு, இறுக்கமான போனிடெயில், நீண்ட நேரம் தொப்பிகள் அணிவது, சுத்தமாக இல்லாத ஹெல்மெட் அணிதல், தலைமுடியைக் கழுவும் போது உச்சந்தலையைச் சரியாகச் சுத்தம் செய்யாதது போன்றவை இந்த பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்று அவர் கூறுகிறார்.

உங்களுக்கு ஏற்கனவே தோல் அழற்சி அல்லது பரு இருந்தால், ஸ்டீராய்டு அல்லது ஆன்டிபயாடிக்ஸ் போன்ற மருந்துகளை எடுத்துக் கொண்டால், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு இருந்தால், நீங்கள் ஸ்கால்ப் ஃபோலிகுலிட்டிஸுக்கு ஆளாகலாம்.

சிக்கலை எப்படி கவனித்துக்கொள்வது?

தோல் மருத்துவர் ஸ்வாதி திரிபாதி கருத்துப்படி, முடியின் வேர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை பாதிக்கும் பாக்டீரியா – மற்றும் மீண்டும் மீண்டும் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் – பின்வருவனவற்றைச் செய்வதன் மூலம் சமாளிக்கலாம்:

1. தொப்பிகள், ஸ்கல் கேப்ஸ், ஹெல்மெட் போன்றவற்றை நீண்ட நேரம் அணிவதைத் தவிர்க்கவும்.

2. நல்ல தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிக்கவும்.

3. துண்டுகள், உடைகள், சீப்புகளைப் பகிர்வதைத் தவிர்க்கவும்.

4. உங்கள் விரல் நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருங்கள்.

5. செட்ரிமைடு (cetrimide) அடிப்படையிலான ஷாம்பூவைப் பயன்படுத்தவும்.

6. மீண்டும் மீண்டும் வரும் நோய்த்தொற்றுகளைத் தடுக்க, பராமரிப்பு முறையைப் பற்றி உங்கள் தோல் மருத்துவரிடம் கேளுங்கள்.

7. நீரிழிவு நோய் உள்ளதா என்று நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

HAIR TIPS,LIFESTYLE

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *