கவுண்டமணி
நகைச்சுவை மன்னன் என தமிழ் சினிமா ரசிகர்களால் அழைக்கப்படுபவர் கவுண்டமணி. இவருடைய நகைச்சுவை காட்சிகளை எப்போது பார்த்தாலும், சலிக்கவே சலிக்காது. இவர் 80ஸ் களில் பண்ணிய நகைச்சுவை கூட இன்று நம்மை சிரிக்க வைக்கிறது.
குறிப்பாக கவுண்டமணி மற்றும் செந்தில் இருவரும் இணைந்து செய்யும் நகைச்சுவை காட்சிகள் பட்டைய கிளப்பும். மேலும் சத்யராஜ், மணிவண்ணன், கவுண்டமணி கூட்டணி என்றால் சொல்லவே தேவையில்லை. நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது
இவர் நடிப்பில் கடைசியாக கடந்த 2016ஆம் ஆண்டு வாய்மை எனும் திரைப்படம் வெளிவந்தது. இதன்பின் எந்த ஒரு படத்திலும் கவுண்டமணி நடிக்கவில்லை. 84 வயதாகும் நடிகர் கவுண்டமணி இன்று மட்டுமல்ல என்றுமே நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கவுண்டமணியின் மனைவி
கடந்த 1963ஆம் ஆண்டு சாந்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், நடிகர் கவுண்டமணி தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

The post கவுண்டமணியின் மனைவியை பார்த்துள்ளீர்களா? appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.




