ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் முதல் வேலையாக நிகழ்நிலைக் காப்புச் சட்டம் மீளப்பெறப்படும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஊழல்களை அம்பலப்படுத்தும், குற்றங்களை வெளிப்படுத்தும் நபர்களை இலக்கு வைத்தும், அவர்களின் அரசியல் செயற்பாடுகளை மட்டுப்படுத்தும் நோக்கிலுமே நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் அவசர அவசரமாக கொண்டுவரப்பட்டுள்ளது.
இது ஏற்புடைய சட்டமூலம் அல்ல என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர், தனது இருப்பைக்காப்பதற்கான அரசின் நகர்வாகவே இது அமைந்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் முதல் வேலையாக நிகழ்நிலைக் காப்பு சட்டம் மீளப்பெறப்படும் எனவும் அஜித் பி பெரேரா குறிப்பிட்டார்.




